புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் இன்று மாவட்ட ஆட்சியர் அருணை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், “புதுச்சேரி முத்தியால்பேட்டையை ஒட்டியுள்ள தமிழ்நாடு பகுதியான கோட்டகுப்பம் பகுதியில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முத்தியால்பேட்டை பகுதியில் தொற்று பரவாமல் இருக்க அந்த பகுதி மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் யாரும் வெளியே நடமாட தடைவிதிக்தப்பட்டது.
மேலும் இப்பகுதியில் மக்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டனர். முத்தியால்பேட்டை தொகுதி மக்கள் யாரும் கடந்த 12 நாட்களாக வீட்டைவிட்டு வெளியே வராமல் தனிமைப்படுத்திக் கொண்டனர். இதில் அரசின் உத்தரவை ஏற்று இத்தொகுதி மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு கூட வெளியே வரவில்லை.