தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்து பொதுமக்கள் வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில், வெங்காயத்தை பதுக்கக்கூடாது என்றும், அதிக விலைக்கு விற்கக்கூடாது என்றும் தமிழ்நாடு, புதுச்சேரி அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி குபேர் மார்க்கெட் என்கிற பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள வெங்காயக் கடைகள், குடோன்களில் குடிமைப்பொருள் துறை அலுவலர் வல்லவன் தலைமையில் அங்கு உள்ள 10க்கும் மேற்பட்ட வெங்காய குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 2 டன் வெங்காயத்தை ஆய்வு செய்த அலுவலர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெங்காயங்கள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
மார்க்கெட்டில் ஆய்வு நடத்தும் குடிமைப்பொருள் துறை அலுவலர்கள் மேலும் வெங்காயத்தை ஆய்வுசெய்த அவர்கள் அதன் தரத்தையும், உபயோகத்துக்கு பயன்படுத்த முடியுமா? என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டனர். கடை உரிமையாளரிடம் "அரசு அனுமதித்த அளவு இருப்பைத் தவிர அதிகளவில் வெங்காயத்தை பதுக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அலுவலர்கள் எச்சரித்தனர்.
இதையும் படிங்க: 'ஒரு கிலோ வெங்காயம் ரூ. 10 மட்டுமே...' - ஸ்தம்பித்துப் போன கடலூர்