புதுச்சேரியில் பிரசித்திப் பெற்ற மணக்குள விநாயகர் கோயில் உள்ளது. இங்குள்ள யானை லட்சுமியை இயற்கையான சூழலில் பராமரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட காளதீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான சின்னையாபுரம் பூச்சியார் தோட்டம் வார்டு-பி பிளாக்கில் 9இல் ஒரு ஏக்கர் நிலத்தில் இன்று (செப்டம்பர் 4) காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் மணக்குள விநாயகர் யானைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜை - சிறப்பு பூஜையுடன் நடைப்பயிற்சி
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜையுடன் வரவேற்பு செய்யப்பட்டு நடைபயிற்சி அளிக்கப்பட்டது.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜையுடன் நடைபயிற்சி
பின்னர், யானை லஷ்மி அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டது. இதில் மணக்குள விநாயகர் கோயில் அறங்காவல் தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் குணசேகரன், உறுப்பினர் பரசுராமன், நிர்வாக அலுவலர் வெங்கடேசன் மற்றும் காளத்தீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோயில் தலைவர் பாஸ்கரன், துணைத்தலைவர் குணசேகரன், செயாளர் சீனுவாசன், பொருளாளர் கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.