மக்கள் நீதி மய்யம் கட்சியில் பெண்களுக்காக ‘மய்யம் மாதர் படை' என்ற புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி ‘மய்யம் மாதர் படை' சேர்ந்த பர்வதவர்தினி, கடந்த ஒரு வாரமாக ராஜ் பவன் தொகுதி மக்களுக்கு பூஜை பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறார். அதில் கட்சி சின்னமும், அவரின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. மக்கள் நீதி மையம் கட்சி இலவசங்களை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த நபர், இலவசங்களை வாரி வழங்குவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று, ராஜ்பவன் தொகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பர்வதவர்தினி, "இந்த தொகுதியில் தான் பிறந்து வளர்ந்து, கல்வி பயின்றேன். இங்கிருக்கும் நீண்டக் கால பிரச்னைகள் எனக்கு நன்கு தெரியும். அதனால், இங்குள்ள சில ஏழைகளுக்கு என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை செய்து வருகிறேன். மக்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், வீட்டு பெண்களிடம் எனது அறிமுகத்தை கொண்டு சேர்க்கவும், பூஜைபொருட்களை இலவசமாக வழங்கி வருகிறேன்.