தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம் - மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு

புதுச்சேரி : மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கோரி மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

By

Published : Oct 31, 2020, 11:15 PM IST

பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக புதுச்சேரி மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில், காமராஜர் சிலை அருகே அக்கட்சித் தலைவர் கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜா சிக்னல் அருகே நடைபெற்றஇந்த ஆர்ப்பாட்டத்தில், மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்காததைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அக்கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்முழக்கங்கள் எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details