உத்தரப் பிரதேச இளம்பெண் பாலியல் வன்புணர்வு: நாராயணசாமி மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்! - மெழுகுவர்த்தி ஊர்வலம்
புதுச்சேரி: உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சம்பவத்தை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றார்.
உத்தரப் பிரதேசத்தில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை, அநியாயத்தை கண்டித்து புதுச்சேரி மகிளா காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி நடந்தது.
புதுச்சேரி அண்ணா சதுக்கத்தில் தொடங்கிய இப்பேரணி அண்ணா சாலை வழியாக நேரு வீதி மிஷன் வீதி வழியாக தலைமை தபால் நிலையம் முன்பு வந்தடைந்தது.
அங்கு கட்சி முக்கிய பிரமுகர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். முன்னதாக பேரணியை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்து மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டர்.
இந்த ஊர்வலத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் பாலன், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், தொகுதி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.