தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொரோனா வைரஸ்: புதுச்சேரி மாஹே பகுதிக்கு விடுமுறை! - corona virus mahe territory school and college leave

புதுச்சேரி: கொரோனா வைரஸ் அச்சத்தால் மாஹே பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஹே
மாஹே

By

Published : Mar 11, 2020, 11:39 PM IST

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. தினந்தோறும் கொரோனா பாதித்த நோயாளிகள் பல்வேறு மாநிலங்களில் கண்டறியப்படுகின்றனர். சமீபத்தில் கேரளாவில் 15 பேர் பாதிப்படைந்ததால், அவசர நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டுவருகிறது. வரும் 31ஆம் தேதி வரை அனைத்து திரையங்குகளையும் மூட ஆணை பிறப்பித்துள்ளது.

அறிக்கை

இந்நிலையில், கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள புதுச்சேரி மண்டலமான மாஹே பகுதியில் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாஹே மண்டல அலுவலர் கூறுகையில், "கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், இஸ்லாமிய பள்ளிகள் அனைத்துமே வரும் 31ஆம் தேதிவரை விடுமுறை விடப்படுகிறது. ஏழாம் வகுப்பு வரை தேர்வுகள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. 8ஆம் வகுப்புக்கு நடைபெறும் தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.

புதுச்சேரி மாஹே பகுதிக்கு விடுமுறை

இதையும் படிங்க: 'எனக்கு இதை சமைத்து தரியா' - மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

ABOUT THE AUTHOR

...view details