புதுச்சேரி நெட்டபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். விவசாயியான இவர் உறவினர் திருமணத்திற்காக இவரது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கல்மண்டபம் பகுதி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு உள்ள தனியார் டயர் தொழிற்சாலை அருகே, கம்பெனி லாரி ஒன்று கம்பெனியிலிருந்து வெளியே வந்தபோது, எதிர்பாராமல் சக்திவேல் வாகனம் மீது மோதியது.
லாரி மோதி விவசாயி பலி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி! - புதுச்சேரி லாரி மோதி விபத்து
புதுச்சேரி: உறவினர் திருமணத்திற்காக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
![லாரி மோதி விவசாயி பலி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி! puducherry](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8527249-thumbnail-3x2-pud.jpg)
puducherry
இந்த விபத்தில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருசக்கர வாகனத்தில் அமர்திருந்த அவரது மனைவி பலத்த காயமடைந்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாரி மோதி விவசாயி பலி
இதையும் படிங்க:நூறாயிசு சாமானியன்! கொல்லம் விபத்து வைரல் சிசிடிவி!
Last Updated : Aug 23, 2020, 8:56 PM IST