கரோனா ஊரடங்கு இரண்டு மாதங்களாக புதுச்சேரியிலும் அமலில் உள்ளதால், அனைத்து மதுக்கடைகளும், கள்ளுக்கடைகளும் புதுவை முழுவதும் மூடப்பட்டன.
புதுச்சேரியில் மது விற்பனை தொடக்கம்! - Liquor prices rise in Puducherry
புதுச்சேரி: புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கானவர்கள் நீண்ட வரிசையில் நின்று தேவைக்கு அதிகமான மதுக்களை வாங்கிச் சென்றனர்.
மதுவின் உயர்வால் மது கடையில் குறைந்து காணப்படும் மதுபிரியர்கள் கூட்டம்
இந்நிலையில், புதுவை அரசின் தீவிர முயற்சியால் இரண்டு மாதங்களுக்குப் பின் மதுக்கடைகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டன. முதல்கட்டமாக புதுச்சேரி, காரைக்காலில் மட்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஏனாமில் விரைவில் மதுக்கடைகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் மாகி பகுதிகளில் மதுக்கடைகளை திறப்பது குறித்து தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை.
மேலும், புதுச்சேரியின் நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள மதுபானக் கடைகள் காலை 10 மணியளவில் திறக்கப்பட்டன. கிராம பகுதியில் உள்ள சில இடங்களில் மட்டும் மதுக்கடைகள் திறக்க சற்று தாமதம் ஆனது. முன்னதாகவே, மதுக்கடைகள் முன்பு மக்கள்கூடி இருந்தனர்.
குடிமகன்களுக்கு வசதியாக மதுக் கடைகளுக்கு முன்பு இடைவெளிவிட்டு வளையம் போடப்பட்டிருந்தன.
குறிப்பாக, மதுக் கடைகளுக்கு முன்பு சானிடைசர் வைக்கப்பட்டிருந்தது. முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது பாட்டில்கள் வழங்கப்பட்டன. மேலும், பெரும்பாலானோர் நீண்ட வரிசையில் தகுந்த இடைவெளி விட்டு நின்று கூடுதலாக மதுபானங்களை பெற்று சென்றனர்.
மது வகைகளின் விலை மற்ற மாநிலங்களை விட புதுச்சேரியில் மிகக்குறைவாக இருக்கும். ஆனால், தற்போது கரோனா தொற்று பரவி வருவதால், 154 ரக மதுபானங்களுக்கு தமிழ்நாட்டுக்கு இணையான விலையும், தமிழ்நாட்டில் கிடைக்காத ரகங்களுக்கு 25 விழுக்காடு வட்டியுடன் கூடிய விலையும், நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:உள்நாட்டு விமான சேவை தொடக்கம்: சென்னையில் 15 விமானங்கள் ரத்து!