கரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன்காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களை மூடக்கோரியும், மக்கள் அங்கு கூடுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, புதுச்சேரியில் முக்கிய சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
புதுச்சேரியில் கிரண்பேடி திடீர் ஆய்வு - புதுச்சேரியில் கிரண்பேடி திடீர் ஆய்வு
புதுச்சேரியில் கரோன முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திடீர் ஆய்வுமேற்கொண்டார்.
முதலமைச்சர் நாராயணசாமியின் உத்தரவின்பேரில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் ஷிஃப்ட் முறையில் பணிபுரிந்துவருகின்றனர். இந்த நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, காவல் துறைத் தலைவர் பாலாஜி ஸ்ரீவத்ஸவா இருவரும் நேற்று கரோனா நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரில் ஆய்வுமேற்கொண்டனர். ஆய்வில் கிருமி நாசினி தெளித்தல், கைகளுக்கு சானிடைசர் வழங்குதல் உள்ளிட்டவற்றை பின்பற்றாத வியாபார கடைகளின் உரிமையாளர்ளுக்கு அறிவுரை வழங்கினர்.
இதையும் படிங்க:'அலுவலர்கள் தவறு செய்து இருந்தாலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்'