பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி சுதந்திரம் கிடைத்து தாய்நாடான இந்தியாவுடன் 1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இணைந்தது. ஆளுநர் மாளிகையில் அன்றைய தினம் பிரெஞ்சு கொடி இறக்கப்பட்டு இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதனால் நவம்பர் 1ஆம் தேதியை புதுச்சேரி அரசு விடுதலை நாளாக கொண்டாடி வருகிறது.
இந்நிலையில் கடற்கரை சாலை காந்தி திடலில் இன்று(நவ 1) விடுதலை நாள் விழா நடந்தது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
புதுச்சேரி விடுதலை நாள் விழா அப்போது பேசிய அவர், புதுச்சேரி-கடலூர் ரயில் போக்குவரத்தை செயல்படுத்தும் திட்டத்தை மறு ஆய்வு செய்து ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பழைய சிறைச்சாலை வளாகம் உட்பட 10 இடங்களில் 15 கோடி ரூபாய் செலவில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
விடுதலை நாளை முன்னிட்டு பொதுமக்களும், மாணவர்களும், சுற்றுலா பயணிகளும் புதுச்சேரியின் வரலாற்றை தெரிந்துகொள்ளும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் ‘புதுச்சேரி வரலாறு’ என்ற தலைப்பிலான புகைப்பட கண்காட்சி நேரு சிலை அருகில் உள்ள கைவினை கண்காட்சி திடலில் நடக்கிறது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: சென்னையில் 2 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு