தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி விடுதலை நாள்: தேசியக் கொடியேற்றி அமைச்சர் கமலக்கண்ணன் மரியாதை!

புதுச்சேரி: பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி விடுதலை பெற்ற நாளான இன்று (அக்.1) காரைக்காலில் புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாப்பட்டது.

தேசியக் கொடியேற்றி அமைச்சர் கமலக்கண்ணன்
தேசியக் கொடியேற்றி அமைச்சர் கமலக்கண்ணன்

By

Published : Nov 1, 2020, 2:50 PM IST

புதுச்சேரி மாநிலம், காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து 1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி விடுதலை அடைந்தது. அதன்படி, புதுச்சேரி விடுதலை நாள் விழா இன்று காரைக்கால் மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது.

காரைக்கால் கடற்கரையில் விடுதலை நாளை முன்னிட்டு தேசியக் கொடியை வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தேசியக் கொடியேற்றி அமைச்சர் கமலக்கண்ணன்

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ‘அமிழ்தம் நடமாடும் உணவகம்’ மூலம் மலிவு விலையில் உணவு வழங்கும் திட்டம் உள்ளாட்சி அமைப்பின் மூலம் முதல் கட்டமாக காரைக்கால் நகராட்சியில் நடப்பு நிதியாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. காரைக்காலில் கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, உயிரிழப்புகள் கட்டுக்குள் உள்ளது” என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து கௌரவித்தார். இவ்விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் உள்ளிட்ட அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: வைரமுத்துவிற்கு ஓவியம் பரிசளித்த ஆயுள் தண்டனைக் கைதி!

ABOUT THE AUTHOR

...view details