தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா தடுப்பு நடவடிக்கை: புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் மூடல் - புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் மூடல்

புதுச்சேரி: கரோனா தடுப்பு நடவடிக்கையாக சட்டப்பேரவை வளாகம் ஜூலை 31ஆம் தேதிவரை மூடும்படி சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் மூடல்
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் மூடல்

By

Published : Jul 28, 2020, 3:55 PM IST

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸின் கதிர்காமம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என்.எஸ்.ஜே ஜெயபாலுக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) மரத்தடியில் பேரவை கூட்டம் நடைபெற்றது. அதில் ஜெயபாலும் கலந்து கொண்டார்.

இதனையடுத்து, முதலமைச்சர் நாராயணசாமி, பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள், பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலர் அஸ்வனி குமார் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 126 பேருக்கு நேற்று (ஜூலை 27) கரோனா சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்றைய சோதனையின் முடிவுகளை மாநில சுகாதாரத்துறை இன்று (ஜூலை 28) அறிவித்துள்ளது. அதில், கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்ட முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் மூடல்

தற்போது சட்டபேரவை செயலர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "புதுச்சேரி சட்டப்பேரவையில் உறுப்பினருக்கு கரோன நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் நோக்கில் சட்டப்பேரவை வளாகத்தை ஜூலை 31ஆம் தேதி வரை மூடும்படி சட்டப் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சட்டப்பேரவை செயலகம், வளாகத்தினுள் இயங்கும் மற்ற அலுவலகங்கள் வரும் 31ஆம் தேதிவரை மூடப்பட்டிருக்கும். வழக்கமான அலுவலகப் பணிகள் ஆகஸ்ட் மூன்றாம் தேதி முதல் தொடங்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருபாய் அம்பானியின் சகோதரர் ராம் நிக்பாய் அம்பானி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details