தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காரைக்காலில் முதல்முறையாக 100 பேருக்கு கரோனா பாசிட்டிவ்! - காரைக்கால் கரோனா பாதிப்பு

புதுச்சேரி: காரைக்காலில் முதல்முறையாக ஒரே நாளில் நூறு பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona test
Corona test

By

Published : Sep 20, 2020, 4:24 PM IST

கரோனா வைரஸ் தொற்று, ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் முன்பு இதுவரை எப்போதும் பதிவாகாத அளவாக முதல்முறையாக இன்று ஒரே நாளில் 101 நபர்களுக்கு காரணம் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால்அம்மாவட்ட மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது. இதுவரை காரைக்கால் மாவட்டத்தில் 15,596 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 1,792 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 1,206 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 554 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 34 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details