புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 23ஆம் தேதியே தொடங்கியபோதும், கடந்த நான்கு நாட்களாக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், அகில இந்திய மக்கள் கழகத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் சுயேட்சையாக போட்டியிட முடிவெடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி புதுச்சேரி இடைத்தேர்தலில் போட்டி! - காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல்
புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நாம் தமிழர் கட்சி உட்பட மூன்று பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அதன்படி, புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள சுற்றுலாத் துறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரி முகம்மது மன்சூர் கோவிந்தனிடமிருந்து வேட்புமனுவை பெற்றார்.
இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக பிரவீனா மதியழகன், கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் லெனின் துரை ஆகியோரும் வேட்புமனு தாக்கல்செய்தனர். புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை மூன்று பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.