புதுச்சேரி ரெட் எர்த் பயிற்சி மைய நிறுவனரும் போட்டி ஒருங்கிணைப்பாளருமான ஜாக்குலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, பெங்களூருவில் வருகின்ற டிசம்பர் மாதம் தேசிய ஜூனியர் குதிரையேற்றப் போட்டிக்கான தகுதி சுற்றுப் போட்டி புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில் இயங்கும் ரெட் எர்த் பயிற்சி மையத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தகுதி சுற்றுப்போட்டி வரும் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
இதற்காக 70 குதிரைகளும் 100 வீரர்களும் பங்கேற்கின்றனர். சென்னை, பெங்களூரு, கோவை, ஹைதராபாத் ஆகிய பயிற்சிப் பள்ளிகளில் இருந்து வீரர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். சண்டிகர் முன்னாள் ராணுவ அலுவலர் கியான் பூரி, சென்னை கிஷோர் நானி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்பார்கள். நடைப்பயிற்சி, உயரம் தாண்டுதல், டிரஸ் ஏஜ் எனப்படும் அலங்கார நடைப்பயிற்சி ஆகியவை தகுதிச் சுற்று போட்டியில் இடம்பெறுகிறது.