புதுச்சேரி அரசின் பள்ளி கல்வி இயக்கம் சார்பில் அதன் இயக்குநர் ருத்ரகெவுடு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'கரோனா வைரஸ் அச்சுறுத்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் பகுதிகளில் இயங்கும் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் ஃப்ரிகேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை 16ஆம் தேதி முதல் இம்மாதம் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
புதுச்சேரியில் கரோனா எதிரொலி - ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை - Corona echo in Puducherry
புதுச்சேரி: கரோனா எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் கொரனா எதிரொலி
மேலும், பள்ளி நிர்வாகங்கள் எக்காரணத்தைக் கொண்டும் மேற்கூறிய வகுப்புகளை நடத்தக் கூடாது என்றும்; மீறும் பட்சத்தில் தேவையான நடவடிக்கை புதுச்சேரி கல்வித்துறையால் எடுக்கப்படும் எனவும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக சார்பில் தங்க கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி