தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மக்கள் சுயக் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் - புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுச்சேரி: வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரி திரும்பும் மக்கள் சுயக் கட்டுப்பாடோடு தாங்களாகவே வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என, அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர்
புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர்

By

Published : May 11, 2020, 10:54 PM IST

நாடு முழுவதும், கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இருப்பினும், புதுச்சேரி மாநிலத்தில் வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்திய மாநில அரசு, தொழிற்சாலைகள், தனிக்கடைகள் இயங்க அனுமதி வழங்கியது.

புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

இந்நிலையில், காணொலி வாயிலாக மக்களைச் சந்தித்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், "புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை புதுச்சேரியில் நான்காயிரத்து 364 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், நான்காயிரத்து 273 பேருக்கு தெற்று இல்லை என தெரியவந்துள்ளது. மேலும், வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரி திரும்பும் மக்கள் சுயக் கட்டுப்பாடோடு தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஊரடங்கால் புதுச்சேரி மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு குறித்தும், மாநிலத்தின் தேவைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை இயல்பு நிலைக்குத் திரும்ப குறைந்தது ஒரு வருட காலம் ஆகும் என்று கூறியுள்ளார்.

இதையும் பார்க்க: 'வந்தே பாரத் திட்டம்' டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட 326 பேர்!

ABOUT THE AUTHOR

...view details