புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வெளியிட்டுள்ள காணொலியில், "புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் ஆகிய பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பு அதிகளவு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 10 மணியிலிருந்து இன்று காலை 10 மணிவரை மாநிலத்தில் 633 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யபட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 24 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 19 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையிலும், 4 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், ஒருவர் காரைக்கால் மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும், புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கி இருந்த 93 வயது மூதாட்டி ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.