தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் உயிரிழப்பவர்களை தகனம் செய்யவுள்ள தொண்டு நிறுவனம்! - கரோனா தொற்று

புதுச்சேரி: கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் சடலத்தை தகனம் செய்ய தன்னார்வ தொண்டு அமைப்பிடம் வழங்க திட்டமிட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்
மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்

By

Published : Jun 9, 2020, 7:24 PM IST

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "புதுச்சேரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனை, ஜிப்மரில் 127 பேர் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், தற்போது மேலும் ஐந்து பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மாகி பிராந்தியத்தில் அபுதாபியில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 132ஆக அதிகரித்துள்ளது. இதில் 55 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 77 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் தற்போது கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரியில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்வு நிலைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மிகவும் அவசியம். பொதுமக்களின் ஒத்துழைப்புதான் மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது.

வைரஸ் தொற்று பாதிப்படைந்து இறந்தால் அவர்களை ஒரே இடத்தில் தகனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியை தன்னார்வ தொண்டு அமைப்பிடம் வழங்க திட்டமிட்டுள்ளோம். இறந்தவர்களின் குடும்பத்தினர் அனுமதியுடன் அவர்களின் உடல் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் உரிய மரியாதையுடன் உடலை மின் தகனம் செய்வார்கள். இதற்கான கோப்பு, துணை நிலை அளுநரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும்" என்று தெரிவித்தார்.


ABOUT THE AUTHOR

...view details