புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று காலை நகர் முழுவதும் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார்.
முன்னதாக புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டை ஆய்வு செய்தார். பின்னர் அவர் அங்கிருந்த பொதுமக்களிடம் மாநில மக்களின் நலன் கருதி காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை தினமும் வந்து வாங்குவதை தவிர்த்து நான்கு ஐந்து நாள்களுக்கு ஒருமுறை வந்து வாங்கிச் செல்லுங்கள் என வலியுறுத்தினார்.