புதுச்சேரி மாகே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி அபுதாபிக்குச் சென்றுவிட்டு கோழிக்கோடு விமான நிலையம் வழியாக மீண்டும் இந்தியா திரும்பினார். இந்நிலையில் அவருக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றார். அவருடைய ரத்த மாதிரியை மருத்துவர்கள் ஆய்வு செய்ததில் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாகே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதலால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.