புதுச்சேரி அரசு சின்ன வீராம்பட்டினம் பகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த மத்திய அரசுடன் இணைந்து சுமார் 3 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த தூய்மையான கடற்கரையை உருவாக்கி வருகிறது. இதுகுறித்து, அரசு கொறடாவும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனந்தராமன் ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
சுற்றுலா பயணிகளை கவர புதுச்சேரி அரசு முனைப்பு
புதுச்சேரி: அரசு சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கப்பெறும் நிதி ஆதாரத்தை பெருக்குவதற்காக 3.5 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பல்வேறு புதிய சுற்றுலா திட்டங்களை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
அதில் அவர் கூறியுள்ளதாவது,சின்ன வீராம்பட்டினம் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்காக பயணியர் தங்கும் விடுதி, உணவு விடுதிகள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக கடலில் குளிப்பதற்கு ஏதுவாகவும் பாதுகாப்பு நீச்சல் வீரர்களை பணியமர்த்தல், பிளாஸ்டிக் குப்பைகள் முற்றிலும் தடை விதித்தல் உட்பட சிறப்பு ஏற்பாடுகளை செய்துவருகிறது.
மேலும், இங்கு எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த கோவா போன்று காசினோ கடல் சூதாட்ட கிளப் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் சின்ன வீராம்பட்டினம் கடற்கரை சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த பாதுகாப்பு உள்ள நகரமாக அமையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.