நோயாளிகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட செவிலியர் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளான மே 12ஆம் தேதி ஆண்டுதோறும் உலக செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. செவிலியருக்கு வாழ்த்து தெரிவிக்கும்விதமாக வாட்ஸ்அப் பதிவில் காணொலி வெளியிட்டுள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அரசு மருத்துவமனை செவிலியரை தனது ஆளுநர் மாளிகைக்கு அழைத்து அவர்களுக்குக் கைக்கூப்பி தலை வணங்கி நன்றி தெரிவித்தார்.
செவிலியருக்குத் தலை வணங்கிய கிரண் பேடி! - puducherry state latest news
புதுச்சேரி: செவிலியர் தினத்தையொட்டி செவிலியரை தனது மாளிகைக்கு அழைத்த துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, அவருக்குத் தலை வணங்கி நன்றி தெரிவித்தார்.
துணை நிலை ஆளுநர் கிரண் பேடி
மேலும் அவர், இது செவிலியருடைய நாள் என்றும் இந்நாளில் மக்களுக்குச் சேவைபுரியும் அவர்களுக்கு அனைவரின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அன்பின் காரணமாக மற்றவர்களால் ஒருவரை மட்டும் காக்க முடியும், ஆனால் தாங்கள் தினந்தோறும் ஆயிரம் பேருக்கு மனதார சேவை செய்கிறீர்கள் என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் பார்க்க: ஈடிவி பாரத் செய்திகள் எதிரொலி: ம.பி.யிலிருந்து காரைக்கால் மாணவர்கள் 17 பேர் மீட்பு!
Last Updated : May 13, 2020, 11:17 AM IST