புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து கிரண்பேடி வாட்ஸ்அப் மூலம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் , ”காரைக்காலில் ஒரு கைரேகை ஜோதிடம் பார்ப்பவரின் வழியாக 13 நபர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருடைய அறியாமையால் மற்றவர்களுக்கும் தொற்றை பரவச் செய்துள்ளார். அவருக்கான சிகிச்சையை அவரே வீட்டில் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
புதுச்சேரியில் மற்றொருவர் வீடு வீடாகச் சென்று பிரசாதம் வழங்கியுள்ளார். இறுதியாக அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரை சார்ந்தோருக்கு தொற்று பரவ இவர் காரணமாகி விட்டார். கரோனாவை எதிர்த்து போராடுவதற்கு நாம் *4S* என்ற பாதுகாப்பு வழிமுறையைப் பின்பற்ற வேண்டும்.
காரைக்காலில் ஜோதிடர் மூலம் 13 நபர்களுக்குக் கரோனா - கிரண் பேடி தகவல்!
புதுச்சேரி: காரைக்காலில் கைரேகை ஜோதிடர் மூலம் 13 நபர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.
மேலும் சில நோயாளிகளுக்குக் கரோனா நோய்த் தொற்று எவ்வாறு பரவியது என்று அறிந்ததில் சிலர், சிறிய மதுபான விருந்துகள், ஒரு சிலருடைய வீட்டில் நடந்த சிறிய பொதுவான விருந்துகளில் பங்கேற்று இருந்தது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு தொழிற்சாலையினுடைய மேலாளர்களும் அவர்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கரோனாவுக்கு எதிரான *4S* என்ற பாதுகாப்பு வழிமுறையை பின்பற்றுவதில் குறைபாடு ஏற்பட்டால், அந்த தொழிற்சாலையின் மேலாளர்களை பொறுப்பேற்க வேண்டும். இதைப் பின்பற்றவில்லை எனில், வழக்குப் பதியப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு முகக்கவச தொழிற்சாலையில் மிக அதிகமான கரோனா பரவலை ஏற்படுத்தியதைப் போல மீண்டும் நடக்கக்கூடாது. கரோனா பரவுவதைத் தடுப்பதற்கான வழிமுறை, நம் கையிலேயேதான் இருக்கிறது. நம்மைப் பாதுகாத்துக் கொள்வதால் மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். இது அப்படியே நேர்மாறாகவும் பொருந்தும்.
மேலும், வெளிநபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். வெளியிலிருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்பதை, நீங்கள் அறிய முடியாது. ஒரு வேளை அவர்கள் காய்ச்சலைக் குறைப்பதற்கு வீட்டிலேயே மருந்து எடுத்துக் கொண்டிருக்கலாம். எனவே, கவனமாக இருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.