தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பழங்குடியின இளைஞர்களுக்கு ஐந்து நாள்கள் பயிற்சி முகாம்! - Five day training camp for youth

புதுச்சேரி: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 200 பழங்குடியின இளைஞர்களுக்கு ஐந்து நாள்கள் பயிற்சி முகாமை ஆளுநர் கிரண் பேடி இன்று தொடங்கிவைத்தார்.

பழங்குடியின இளைஞர்களுக்கு ஐந்து நாள் பயிற்சி முகாம்
பழங்குடியின இளைஞர்களுக்கு ஐந்து நாள் பயிற்சி முகாம்

By

Published : Jan 21, 2020, 8:21 AM IST

நக்சலைட்டுகள் இருக்கும் மாநிலங்களில் அங்குள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் நேரு யுவகேந்திரா அமைப்பு மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 200 பழங்குடியின இளம் பெண்கள், இளைஞர்களுக்கு ஐந்து நாள் பயிற்சி முகாம் புதுச்சேரியில் நடக்கிறது.

காந்தி வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறும் இம்முகாமினை ஆளுநர் கிரண்பேடி கலந்து கொண்டு தொடங்கிவைத்தார். மேலும் இதில் சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன், நேரு யுவகேந்திரா அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பழங்குடியின இளைஞர்களுக்கு ஐந்து நாள்கள் பயிற்சி முகாம்

முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு தொழில் பயிற்சிகள், கருத்தரங்கு, முன்னேற்றத்திற்கான பயிலரங்கம், கலாசார விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளது.

இதையும் படிங்க:வாழ்க்கையில் பணம் மட்டும் முக்கியமானதல்ல; நேரமும்தான்' - பன்வாரிலால் புரோகித்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details