புதுச்சேரி நகரப்பகுதியில் சாலைகள் பொதுப்பணித்துறை மூலம் நகராட்சி கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டுவருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக சாலைகளை செப்பனிட போதிய நிதி இல்லாததால் பெரும்பாலான சாலைகள் செப்பனிடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாதி தார்சாலை பாதி சிமெண்ட் சாலை - வேடிக்கை பார்த்த பொதுமக்கள்
புதுச்சேரி: ஜென்மராக்கினி மாதா ஆலயம் எதிரே நூதன முறையில் பாதி தார்சாலை மீதி சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
Puducherry government
இந்நிலையில் புதுச்சேரி மிஷின் வீதி, ஜென்மராக்கினி மாதா கோயில் எதிரில் உள்ள சாலையில் பாதி தார்சாலையாகவும், மீதி சிமெண்ட் சாலைகளாகவும் நூதன முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை அந்த வழியாக செல்பவர்கள் வேடிக்கை பார்த்தபடி செல்கின்றனர்.
இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ள சூழலில், அரசு நிதியை முறையாக செலவிடாமல் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி ஏதோ செலவிட வேண்டும் என்ற நோக்கத்திற்காக இவ்வாறு சாலை போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.