தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா நோயாளிகளுக்கு 250 ரூபாய் வழங்கும் புதுச்சேரி அரசு - corona positive cases today

புதுச்சேரி: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு அரசு சார்பில் தலா 250 ரூபாய் நாள் ஒன்றுக்கு உணவுக்காக வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.

krishna rao
krishna rao

By

Published : Aug 17, 2020, 4:28 PM IST

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "புதுச்சேரியில் ஆயிரத்து 88 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில் 302 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் இதுவரை 8 ஆயிரத்து 29 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ்

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆயிரத்து 596 ஆக உள்ளது. ஆயிரத்து 692 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 4 ஆயிரத்து 627 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், புதுச்சேரி தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளுக்கு அரசு சார்பில் தலா 250 ரூபாய் நாள் ஒன்றுக்கு உணவுக்காக வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்த தேவையில்லை" என்றார்.

இதையும் படிங்க:'கரோனாவைப் பரப்பியதில் மதுபானக் கடைகளுக்குப் பங்குண்டு எனத் தெரிந்தும்…' அரசை சாடிய ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details