தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜன.18 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட புதுச்சேரி அரசு முடிவு! - Puducherry news

புதுச்சேரி : யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவையைக் கூட்டுவது தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் நேற்று (ஜன.18) ஆலோசனை நடத்தப்பட்டது.

ஜன.18 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட புதுச்சேரி அரசு முடிவு!
ஜன.18 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட புதுச்சேரி அரசு முடிவு!

By

Published : Jan 16, 2021, 4:55 AM IST

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விவாதிக்க புதுச்சேரி அமைச்சரவையின் கூட்டம் நேற்று (ஜன.15) நடந்தது. சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

ஜன.18 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட புதுச்சேரி அரசு முடிவு!

அந்தக் கூட்டத்தில், ஜன.18ஆம் தேதி சட்டப்பேரவையை கூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவையைக் கூட்டத்தைக் கூட்ட துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை அமைச்சரவை அணுக தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.

இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் அஸ்வின் குமார், நிதித்துறை செயலர் சுர்பீர்சிங், அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, நமச்சிவாயம், கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க :“புதுச்சேரியிலும் திமுக தலைமையிலான ஆட்சி” - காங்கிரசுக்கு செக் வைக்கிறதா திமுக?

ABOUT THE AUTHOR

...view details