தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரீசார்ஜ் செய்யாததால் புதுச்சேரி அரசு பேருந்து கழகத்தின் இணைய சேவை துண்டிப்பு! - Puducherry State latest News

புதுச்சேரி: அரசு பேருந்து முன்பதிவு மையத்தில் இன்டர்நெட் சேவையை ரீசார்ஜ் செய்யாமல் நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டாதால் ஏர்டெல் (AIRTEL) நிர்வாகம் நெட்வொர்க் இணைப்பை துண்டித்துள்ளது.

Puducherry Road Transport Corporation
புதுச்சேரி அரசு பேருந்து கழகம்

By

Published : Jan 30, 2021, 12:21 PM IST

புதுச்சேரியில் 200க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள், உள்ளூர், வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இயங்கும் அரசு சாலை போக்குவரத்து கழக முன்பதிவு மையம் தனது (ரிசர்வேஷன் கவுன்டர்) நெட்வொர்க் இணைப்பின் மாதாந்திர கட்டண தொகையை சரியான நேரத்தில் செலுத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளது.

இதேபோல் பலமுறை அலட்சியமாக இருந்துள்ளதால் ஏர்டெல் (AIRTEL) நிர்வாகம் நெட்வொர்க் இணைப்பை துண்டித்தது. இதனால் கடந்த மூன்று நாட்களாக முன்பதிவு மையம் செயல்படாததால் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது

இதையும் படிங்க: நேபாளம்: தீராத நெருக்கடியில் உள்ள நாடு

ABOUT THE AUTHOR

...view details