தமிழ்நாடு

tamil nadu

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயார் நிலையில் புதுச்சேரி

By

Published : Dec 31, 2020, 7:22 AM IST

புதுச்சேரி : புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கடற்கரை சாலையில் கரையோரம் 1.30 கிலோ மீட்டர் தூரம் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயார்
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயார்

சுற்றுலா நகரமான புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு தமிழ்நாடு, கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அண்டை மாநில சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயார்

ஆனால் இச்சூழலில். உருமாறிய கரோனாவைரஸ் வெளிநாடுகளில் பரவி வருவதால், மத்திய அரசு அளித்துள்ள புதிய வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி கடற்கரை சாலையில் தடுப்புகள் அமைத்து புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயார் நிலையில் புதுச்சேரி


மேலும், புதுச்சேரி கடற்கரை சாலை, ஒயிட் டவுன் ஆகிய இடங்கள் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மதுபானங்களுக்கு கடற்கரை சாலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று (டிச.31) புதுச்சேரி கடற்கரை சாலையின் நடுவில் ஆங்காங்கே மரத்தால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது மற்றும் பொதுமக்கள் கடலுக்குச் சென்று தண்ணீரில் இறங்காத வண்ணம் கடற்கரையோரம் 1.30 கிலோமீட்டர் தூரம் வரை பாதுகாப்பு கருதி தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:எடப்பாடியை நிராகரிக்கும் பாஜக ; முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி!

ABOUT THE AUTHOR

...view details