கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி புதுச்சேரி மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். புதுச்சேரி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், புதுவை நகர ரயில் நிலையம், வில்லியனூர் ரயில் நிலையம், கடை வீதிகள், அண்ணா சாலை, நேரு வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
கரோனா வைரஸ் ஊரடங்கு: வெறிச்சோடி காணப்படும் புதுச்சேரி - புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு
புதுச்சேரி: ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருவதால் புதுச்சேரி மாநிலம் வெறிச்சோடி காணப்படுகிறது.

corona
கரோனாவால் புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவு குறித்து ஒலி பெருக்கி மூலம் பரப்புரை செய்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வணிக வளாகங்கள், மால்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:கரோனா தடையை மீறி கோயிலில் திரண்டவர்கள் மீது வழக்குப்பதிவு