புதுச்சேரி சட்டப்பேரவை கேபினட் அறையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் அருண், சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் அப்போது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் புதுச்சேரி மாநில மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இதுவரை வெளிநாடு சென்று திரும்பியவர்களை கண்காணிப்பது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் பாதிப்பு - பொள்ளாச்சியில் திருமண நிகழ்ச்சிகள் ரத்து