புதுச்சேரி பல்கலைக்கழகம், கிரீன் கேம்பஸ் இணைந்து நடத்திய சுற்றுச்சூழல் சுற்றுப்புறம் மற்றும் நிலையான வளர்ச்சி, பல்துறை அணுகுமுறைகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதனை புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குருமிர்சிங் தொடங்கிவைத்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், "அந்தமான் பகுதியில் உள்ள கடற்கரையில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கடற்கரையைத் தூய்மையாக வைத்துள்ளனர். ஆனால் படிப்பறிவு மிக்க நமது பகுதிகளில் கடற்கரையின் தூய்மையை பேணிக்காக்க தவறிவிட்டோம்.
குப்பைகளைத் தெருக்களிலும் ஏரிகளிலும் வீசாமல் வீட்டில் தரம்பிரித்து எடுத்துவைத்து மறுசுழற்சிக்கு அதைப் பயன்படுத்தலாம்" எனக் கூறினார்.