தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர் பற்றாக்குறையே +2 தேர்ச்சி குறையக் காரணம்' - புதுச்சேரி கல்வி அமைச்சர் - பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

புதுச்சேரி: ஆசிரியர்கள் பற்றாக்குறையால் புதுச்சேரி மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியில் அரசுப்பள்ளிகளின் விழுக்காடு குறைந்துள்ளது என கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

கல்வித் துறை அமைச்சர்
கல்வித் துறை அமைச்சர்

By

Published : Jul 17, 2020, 4:02 AM IST

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வின் முடிவுகள் நேற்று (ஜூலை 16) அறிவிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் உள்ள காமராஜர் வளாகத்தில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, 'புதுச்சேரி மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிய 14 ஆயிரத்து 571 மாணவர், மாணவிகளில்13 ஆயிரத்து 306 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்த தேர்ச்சி விகிதம் 91.32 விழுக்காடாகும். இது கடந்தாண்டை விட 1.62 விழுக்காடு குறைவு. புதுச்சேரி மாநிலத்தில் அதிக அளவில் தனியார் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அரசுப்பள்ளியில் தேர்ச்சி 3.6 விழுக்காடு குறைவாக உள்ளது. அதற்குக் காரணம், ஆசிரியர்கள் பணியமர்த்துவதில் ஏற்படும் தாமதம். இதனால் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது. இது போன்ற சில காரணங்களால் தேர்ச்சி விழுக்காடு கடந்தாண்டை விட குறைந்துள்ளதாக தான் கருதுகிறேன்' எனத்தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details