தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் திமுக வேட்பாளர் தீவிர பரப்புரை! - இடைத்தேர்தல்

புதுச்சேரி: தொழிற்பேட்டை நகரமான தட்டாஞ்சாவடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கட்டுவேன் என்று தட்டாஞ்சாவடி திமுக வேட்பாளர் வெங்கடேசன் வாக்குறுதி அளித்துள்ளார்.

திமுக வேட்பாளர் வெங்கடேசன் பரப்புரை

By

Published : Apr 10, 2019, 3:09 PM IST

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் என்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுக என இருமுனை போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் வெங்கடேசன் போட்டியிடுகிறார். இவர் தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதி பகுதிகளில் இன்று பரப்புரை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன், "தட்டாஞ்சாவடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. எனவே இப்பகுதியில் பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க, நான் வெற்றி பெற்றால் மேம்பாலம் கட்டுவேன். அப்பகுதி மக்கள் நடைப்பயிற்சிக்கு பூங்கா ஒன்று அமைக்கப்படும். தொழில் நகரமான தட்டாஞ்சாவடி பகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்குவதற்கு மூடப்பட்ட நிறுவனங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

திமுக வேட்பாளர் பரப்புரை

ABOUT THE AUTHOR

...view details