புதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேல், கட்சித் தாவல் தடைச் சட்டம் மற்றும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாகக் கூறி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகூர் தொகுதியில் இன்று பல்வேறு இடங்களில் கடையடைப்பு மற்றும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, முதலமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக குரல் எழுப்பி கருப்புக்கொடி ஏந்தி ஊர்வலமாகசென்றனர்.
பாகூர் எம்எல்ஏ-விற்கு ஆதரவாக போராட்டம் - puducherry mla disqualified
புதுச்சேரி:பாகூர் சட்டப்பேரவை உறுப்பினர் தகுதி இழப்பு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கருப்பு கொடி ஏந்தி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகூர் சட்டப்பேரவை உறுப்பினருக்கு ஆதரவாக போராட்டம்
அப்போது, ஒரு குழுவினர் நாராயணசாமி உருவபொம்மையை ஏறிக்க முற்பட்டபோது, காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர்.
இதையும் படிங்க:காலணியை தூக்கிய ஊராட்சி செயலாளர் காணொலி: எம்எல்ஏ வில்வநாதன் விளக்கம்