கரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் நான்காம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்ட சூழ்நிலையில் நேற்று முதல் புதுச்சேரியில் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு தினமும் பலரும் பணி காரணமாக செல்ல இருப்பதினால் பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க இன்று காலை 6 மணிக்கு காரைக்காலுக்கு அரசு பேருந்து ஒன்று இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மக்கள் வரவேற்பு அதிகமாக இருந்ததால் 3 பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவெடுத்து பேருந்துக்கு 32 பயணிகள் என காலை 6 மணிக்கு புறப்பட்டது.
புதுச்சேரியிலிருந்து தமிழ்நாட்டில் கடலூர் மற்றும் நாகை ஆகிய இரு மாவட்டங்களை தாண்டி காரைக்காலுக்கு செல்ல வேண்டி இருப்பதால் இரு மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது.