தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் வீடுகளுக்கே சென்று பொருள்கள் வழங்கும் வாகன சேவை தொடக்கம் - புதுச்சேரியில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

புதுச்சேரி: கரோனா உறுதி செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு காய்கறி உள்ளிட்ட பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடக்கி வைத்தார்.

Puducherry, Corona is a precautionary measure
Puducherry, Corona is a precautionary measure

By

Published : Apr 12, 2020, 5:11 PM IST

புதுச்சேரியில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் புதுச்சேரி ஹெரிடேஜ் ரவுண்ட் டேபிள் சங்கம், புதுச்சேரி அரசுடன் இணைந்து, கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ள பகுதிகளான திருபுவனை, மதகடிப்பட்டு, காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ. 140 மதிப்புள்ள 8 வகையான காய்கறிகள் அடங்கிய பைகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனை நேரடியாக வீடுகளுக்கே சென்று மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன சேவையை முதலமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, சபாநாயகர் சிவகொழுந்து, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், அமைச்சர் கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமிநாராயணன், ஹெரிடேஜ் ரவுண்ட் டேபிள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:கர்ப்பிணி மனைவியை சைக்கிளில் அழைத்துச் சென்ற கணவர்... சாலையில் பிறந்த குழந்தை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details