கடந்த சில நாள்களாகவே இந்திய- சீன எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வந்தது. இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இவர்களுக்கு புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
காங்கிரஸ் சார்பில் எல்லையில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி - இந்திய- சீன எல்லைப் பகுதியில் பதற்றம்
புதுச்சேரி: காங்கிரஸ் கட்சி சார்பில் எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Puducherry congress tribute indian soldiers
புதுச்சேரி காமராஜர் சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்களின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் சுப்பிரமணியன், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.