தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜான் குமார் எம்எல்ஏ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - புதுச்சேரி காங். தலைவர் - Puducherry News

புதுச்சேரி: ஜான் குமார் எம்எல்ஏ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ஏவி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

congress
congress

By

Published : Dec 11, 2020, 10:50 AM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காமராஜர் நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜான் குமார், தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து நிச்சயமாக 100% விலகுவேன் என்று, மாலை பத்திரிகைகளுக்கு நேற்று (டிச. 10) பேட்டி அளித்திருக்கிறார்.

இந்தச் செய்தியை நாங்கள் காங்கிரஸ் மேலிடத்திற்கு தெரிவித்து இருக்கிறோம். வருமான வரித்துறை சோதனையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க, இவர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா பொறுப்பாளர்களை ரகசியமாக சந்தித்தது, புதுவை காங்கிரஸ் கட்சிக்கும், அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும் தெரியும்.

எனவே இவரது இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியாகவும் அல்லது ஏமாற்றமாகவும் இல்லை. இந்து மதத்திலே உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், இந்திய அரசியல் சட்டப்படி கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் அளிக்கப்பட வேண்டிய இட ஒதுக்கீடுகளை கொடுக்காமல் ஏமாற்றி துரோகம் செய்துவருகிற பாரதிய ஜனதா கட்சி, உங்களைப் போன்ற சிறுபான்மையினரை எப்படி ஏமாற்றும் என்பது எங்களுக்குத் தெரியும்.

இவர் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில், முன் வைத்துள்ள கோரிக்கைகள், இன்றும் பரிசீலனையில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. எனவே ஜான் குமார், தனது முடிவை மறுபரிசீலனை செய்வது நல்லது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கார் மோதிய விபத்தில், சாலை ஓரத்தில் நின்றிருந்த சிறுமி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details