தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்கை பதவி நீக்குக! - bjp mla kuldeep singh sengar

புதுச்சேரி: பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியை கொல்ல முயன்றதாக பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்கை பதவி நீக்கக்கோரி புதுச்சேரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

புதுச்சேரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

By

Published : Aug 1, 2019, 8:39 AM IST

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியை கொல்ல முயன்ற பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரை பதவி நீக்கம் செய்யாத மத்திய அரசு, உத்தரப் பிரதேச பாஜக அரசைக் கண்டித்தும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அக்கட்சியின் மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

அப்போது மத்திய அரசைக் கண்டித்தும், குல்தீப் சிங் செங்காரை பதவி விலகக் கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதில் புதுச்சேரி மேலிட பார்வையாளர் சஞ்சய் தத், அமைச்சர் நமச்சிவாயம், சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணவேணி, மகிளா காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details