உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. அப்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் அம்மாநில கிழக்குப்பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
ராகுல் காந்தி மீது தாக்குத்ல: காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் - பாலியல் வன்கொடுமை
புதுச்சேரி: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை உத்தரப் பிரதேச போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததை கண்டித்து, புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இக்கைது நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மதகடியில் அம்மாநில வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் மாவட்ட தலைவர் பாஸ்கரன் உள்பட கட்சியின் பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.