புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்துவருவதால் சட்டப்பேரவை அமைச்சர்கள் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியனுக்கு கடந்த இரண்டு நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதிசெய்யப்பட்டது, இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் அவரது குடும்பத்தில் நான்கு பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 20ஆம் தேதி ராஜிவ் காந்தி பிறந்தநாள் விழாவில் பங்கேற்றபோது அவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதனிடையே கடந்த 27ஆம் தேதி இளைஞர் காங்கிரஸ் நடத்திய நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர் இச்சம்பவம் குறித்து பீதியில் உள்ளனர்.
இதையும் படிங்க:அருமையான நண்பனை இழந்து தவிக்கிறேன் - நாராயணசாமி இரங்கல்