தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங். தலைவருக்கும் முதலமைச்சருக்கும் டிஸ்யூம்... டிஸ்யூம்...! - காங்கிரஸ்

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயமும் முதலமைச்சர் நாராயணசாமியும் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாட்டை கட்சி நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளது கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

puducherry

By

Published : Aug 9, 2019, 12:27 PM IST

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்திற்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி மோதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் டெல்லிக்குச் சென்று கட்சியின் மேலிடத் தலைவர்களை சந்தித்துப் புகார் தெரிவித்திருந்தனர்.

அதையடுத்து மோதலுக்குப் முற்றுப்புள்ளி வைக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்த அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான சஞ்சய் தத் வந்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், மாநில துணைத் தலைவர் தேவதாஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசி அவர்களின் கருத்துகளையும் சஞ்சய் தத் கேட்டுக்கொண்டார்.

நாராயணசாமிக்கும், நமச்சிவாயத்துக்கும் கருத்து வேறுபாடு

இந்நிலையில் இன்று 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சியில் நாராயணசாமி, நமச்சிவாயம், சஞ்சய் தத், காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நாராயணசாமி இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார். மேலும், நாராயணசாமிக்கும், நமச்சிவாயத்துக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு வெளிப்படையாகவே தெரியவந்துள்ளதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கட்சியினர் முணுமுணுத்துக் கொண்டே சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details