இது தொடர்பாக புதுச்சேரி தலைமை வன காப்பாளருக்கு எம்எல்ஏ லட்சுமி நாராயணன் மனு ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில் “மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, வேளாண் அறிவியல் நிலையத்தில் வனத் துறையின் பாதுகாப்பில் உள்ளது. 14 நாட்களுக்கு மேலாகியும் கோயிலுக்கு யானை லட்சுமி திரும்பாதது பக்தர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், முகாமில் யானைக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிப்பதாக தெரியவில்லை. இரவு நேரங்களில் நச்சு பூச்சிகள், பாம்பு மற்றும் விலங்குகளை பார்த்தால் யானை பயப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. தனிமையில் பல நாட்கள் இருந்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி யானையின் உடல்நிலை பாதிக்கும் வாய்ப்புள்ளது. யானைக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என புகார்கள் எழுந்துள்ளன.