தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு கரோனா - சென்னையில் அனுமதி! - கரோனா வைரஸ் தொற்று

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயமூர்த்தி, சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Puducherry Congress MLA admitted to Corona
Puducherry Congress MLA admitted to Corona

By

Published : Sep 26, 2020, 5:07 PM IST

புதுச்சேரி:கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயமூர்த்தி, சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. இதன் ஒருபகுதியாக, கரோனா கட்டுபாட்டு பகுதியில், அந்தந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களுக்குத் தேவையான காய்கறிகளையும் மளிகை பொருள்களையும் வழங்கி வருகின்றனர். இதற்கிடையே இன்று (செப்.26) புதுச்சேரி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயமூர்த்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கடந்த வாரம் புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, அவரும் சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புதுச்சேரியில் இதுவரை ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள், 2 அமைச்சர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முகக்கவசம் அணியாததால் தாக்கப்பட்ட முதியவர் - சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details