கிருமி நாசினி தெளிப்பான்களைக் கைகளால் தொடுவதன் மூலம் ஏற்படும் கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும்வகையில், புதுச்சேரி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் வழிகாட்டுதலின்படி, புதுச்சேரி மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து காலால் இயக்கப்படும் கிருமிநாசினி தெளிப்பான் கருவியை வடிவமைத்துள்ளனர்.
இந்தக் கருவிகள் தற்போது அரசுத் துறைகளுக்கு வழங்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இக்கருவியினை மாவட்ட ஆட்சியர் அருண் நேற்று (மே.13) இயக்கி சோதனையிட்டார்.