தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பிரிவில் பணிக்கு வராதவர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவு - கொரோனா பிரிவில் பணிக்கு வராதவர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவு

புதுச்சேரி: கதிர்காமம் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் 54 ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பிரிவில் பணிக்கு வராதவர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவு
கொரோனா பிரிவில் பணிக்கு வராதவர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவு

By

Published : Apr 3, 2020, 4:29 PM IST

புதுச்சேரி கதிர்காமம் மருத்துவமனையில் 54 ஒப்பந்த ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். மாத ஊதியமாக நான்காயிரம் பெறும் தங்களை பணி நிரந்தரம் செய்ய நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் நிலையில் இரு நாள்களுக்கு முன்பு ஒருநாள் பணி புறக்கணிப்பு போராட்டம் செய்தனர்.

இந்நிலையில் இந்த மருத்துவமனையில் 700 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் 54 ஊழியர்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை மறுத்த ஒப்பந்த ஊழியர்கள் பணி பாதுகாப்பு இல்லாத நிலையில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வாய்ப்புள்ள கரோனா சிகிச்சைப் பிரிவில் நிரந்தர ஊழியர்களை பணியமர்த்த வலியுறுத்தி நேற்று (ஏப்ரல் 2ஆம் தேதி) பணிக்கு வராமல் புறப்பணித்தனர்.

கொரோனா பிரிவில் பணிக்கு வராதவர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவு

அதனைத் தொடர்ந்து கரோனா சிறப்புப் பிரிவில் மருத்துவ பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. மக்கள் நலன் கருதி கரோனா அவசர நிலையை உணர்ந்து அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என சுகாதாரத்துறைக்கு மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details