தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் கடைகளைத் திறக்க விண்ணப்பிக்கலாம்! - கடைகளை திறக்க விண்ணப்பிக்கலாம்!

புதுச்சேரி: கடைகளைத் திறக்க நகராட்சி ஆணையர், வட்டாட்சியர் அலுவலங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் எனப் புதுச்சேரி ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ஆட்சியர் அருண்
புதுச்சேரி ஆட்சியர் அருண்

By

Published : Apr 30, 2020, 10:47 AM IST

நாடு முழுவதும் கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிவப்பு (அதிக பாதிப்பு), மஞ்சள் (மிதமான பாதிப்பு), பச்சை (பாதிப்பில்லா பகுதி) என மூன்று மண்டலங்களாகப் பிரித்தது.

புதுச்சேரியில், கரோனா தீநுண்மி கட்டுக்குள் இருக்கிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகள் தகுந்த இடைவெளியோடு இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் சிறு, குறு தொழில்கள், கடைகள் உள்ளிட்டவற்றை இயக்க அரசிடம் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ஆட்சியர் அருண்

இதுகுறித்து புதுச்சேரி ஆட்சியர் அருண், "தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அனுமதி கேட்டு 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 40 தொழிற்சாலைகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளோம்.

கடைகள் தளர்வு தொடர்பாகச் செயல்திட்ட அறிக்கை தயார்செய்துள்ளோம். இதன்படி பிற கடைகளை திறப்பதற்கு அனுமதி கொடுக்க முடிவு செய்யப்படும்.

புதுச்சேரி உழவர்கரையில் உள்ள கடைகளைத் திறப்பதற்கு நகராட்சி ஆணையர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை ஆணையர்கள் பரிசீலனை செய்து, கடைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அனுமதி கொடுக்கப்படும்.

கிராமப்புற பகுதிகளைப் பொறுத்தவரை பாகூர், வில்லியனுார் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இதற்கான வட்டாட்சியர்கள் தலைமையில் துணை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடைகளைத் திறக்க தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகத்திரை, சானிடைசர் உள்ளிட்டவைகள் கட்டாயம் கடைகளில் இருக்க வேண்டும்.

நகராட்சி கொம்யூனில் உள்ள கடைகள், பதிவு சட்டத்தின்படி முறையாகப் பதிவுசெய்திருக்க வேண்டும். மாநில எல்லை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கடைகளைத் திறக்க அனுமதிக்க முடியாது.

பீர் லாரிகள் இதுவரை புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படவில்லை, இதற்கான ஒப்புதல் கொடுப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்று கூறினார்.

இதையும் பார்க்க: தமிழகக்தின் நீராதார உரிமையை பறிக்கப் பார்க்கிறது மத்திய அரசு - தமிமுன் அன்சாரி

ABOUT THE AUTHOR

...view details